மெல்போர்ன்: பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட மெல்போர்ன் ஸ்டார்ஸ் தகுதிப் பெற்றுள்ளது. மெல்போர்னில் நேற்று நடைப்பெற்ற சேலஞ்சர் சுற்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் களம் கண்ட மெல்போர்ன் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்தது. அந்த அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 83, நிக் மாடின்சன் 11, நிக் லார்கின் 83*, கிளென் மேக்ஸ்வெல் 4* ரன் எடுத்தனர். சிட்னி அணியின் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட் எடுத்தார். அடுத்து களம் கண்ட சிட்னி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன் மட்டுமே எடுத்து 28 ரன் வித்தியாசத்தில் தோற்றது.