ஏழை பெண்ணின் ஜன்தன் வங்கி கணக்கிற்கு வந்த 30 கோடி மின்னல் வேகத்தில் மாயம்: போலீசில் புகார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த சென்னப்பட்டணா  தாலுகா பீ.டி காலனியைச் சேர்ந்தவர் ரிஹானா பானு. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த  இந்த பெண் கடந்த 2015ல் ஜன்தன்  வங்கி கணக்கை தொடங்கினார். ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை அவர் அந்த வங்கி  கணக்கில் ஒரு ரூபாய் கூட செலுத்தியது இல்லை.  இந்நிலையில் டிச.2ம் தேதி  அவரது வங்கி கணக்கிற்கு ரூ.30 கோடி பணம் செலுத்தப்பட்டிருந்தது. இது  ரிஹானா பானுவிற்கு தெரியவில்லை. ஆனால், கணக்கு வைக்கப்பட்டு இருந்த வங்கி  அதிகாரிகளுக்கு இது தெரிந்துள்ளது. அவர்கள் ரிஹானா பானுவிடம் ஆதார் கார்டை  எடுத்துக்கொண்டு வங்கிக்கு வாருங்கள்.

உங்களிடம் விசாரணை நடத்த  வேண்டுமென்று கூறியுள்ளனர். அவர்கள் வெற்று காகிதத்தை கொடுத்த  கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பி விட்டனர். இந்நிலையில்,  டிச.5ம் தேதி  அந்த பணம் முழுவதும் எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் யார் எடுத்தனர் என்பது  தெரியவில்லை. இதுகுறித்து ரிஹானாவின் புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: