ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

போட்செஃப்ஸ்ட்ரூம்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரொஹைல் நசீர் 62, ஹைதர் அலி 56 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சுஷாந்த் மிஸ்ரா 3, கார்த்திக் தியாகி 2, ரவி பிஷ்னோவ் 2 விக்கெட்டை எடுத்தனர். தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 35.2 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Related Stories: