நகை வாங்க உடனே கிளம்புங்க! : ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.136 குறைந்து ரூ.31,016-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. தங்கம் விலை பிப்ரவரி 1ம் தேதி ரூ.31,376 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இதுவே அதிகபட்ச விலையாக இருந்தது.

இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் விலை அதன்பிறகு ஏறுவது கொஞ்சம் இறங்குவது என மாறி மாறி இருந்தது.இந்நிலையில் இன்று(பிப்ரவரி 4ம் தேதி )சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.31,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.17. குறைந்து ரூ.3,877-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.49,80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: