ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.6,890க்கும், சவரன் ரூ.55,120க்கும் விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,800க்கு விற்கப்பட்டது. 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

நேற்று முன்தினம் தங்கம் விலை அதிர்ச்சியளிக்கும் வகையில் மேலும் அதிகரித்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,900க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,200க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில், தங்கம் விலை புதிய உச்சத்தையும் தொட்டது. மேலும் தங்கம் விலை தொடர்ச்சியாக 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்தது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென குறைந்தது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,860க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,880க்கும் விற்கப்பட்டது. இந்த திடீர் விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.100ஐ தாண்டியது. ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.99க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000 என்ற அளவில் விற்பனையானது.

The post ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: