தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தஞ்சாவூர்: தஞ்சை பெருவுடையார் கோயிலில் வருகின்ற 5-ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று 2ம் நாளாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை பெரிய கோயிலில் 12 இடங்களில் அதிநவீன ஸ்கேனர் கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவில் கோவிலுக்குள், முக்கிய நபர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் தவிர, ஸ்கேனர் கருவிமூலம் சோதனையிட்ட பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர சந்தேகப்படும் மர்ம நபர்கள் நடமாட்டத்தை பின்தொடர்ந்து, ஏதாவது மர்மபொருள் வைத்திருக்கிறார்களா என்பதை ஊடுருவி கண்காணிக்கும் அதிநவீன ஸ்கேனர் கேமரா 12 இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: