இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா நூல் வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பு: கலாஷேத்ராவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா  கர்நாடக இசையில் சிறந்தவர் என்பதோடு, இசை குறித்து பல நூல்களையும் எழுதியவர். மதவெறிக்கு எதிராகவும், சாதிய பாகுபாடுகளையும் எதிர்த்து உறுதியாக குரலெழுப்பி வருபவர். இதனை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத மதவெறி சக்திகள், ஏற்கனவே டெல்லியில் நடப்பதாக இருந்த அவரது இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தது போல், 2ம் தேதி நடக்க இருந்த அவரது சென்னை புத்தக வெளியீட்டுக்கும் தடையை உருவாக்கியுள்ளன.

இந்நூலின் உள்ளடக்கம் அரசியல் கலாச்சார ரீதியாக சர்ச்சையை உருவாக்கும் என்று காரணம் கூறி, கடைசி நேரத்தில் கலாஷேத்ரா நிறுவனம் வெளியீட்டு விழாவிற்கான தங்களது அரங்கத்தை தர முடியாது என மறுத்து விட்டது. மத்திய அரசின் இத்தகையப் போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டிக்கிறது.

Related Stories: