வெலிங்டன்: இந்தியாவுடன் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.