கொரோனா வைரஸ் பாதிப்பை சித்த மருத்துவம் சரி செய்யுமா? மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பை சித்த மற்றும் யுனானி மருத்தவங்கள் மூலம் எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை கூறியிருப்பது கேலிக்கு ஆளாகியுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சித்த மருத்துவம் தீர்வளிக்கும் என்று கூறியிருந்தது. யுனானி மருந்துகளும் கொரோனா அறிகுறியை சரி செய்யும் என்றும் தெரிவிக்கப்படடிருந்தது. மேலும், ஹோமியோபதி மருந்தான, Arsenicum album 30 என்பதை, தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தக்காத்துக் கொள்ள உதவும். ஒருவேளை, பாதிப்பு தொடர்ந்தால், இதே மாதிரியில், தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். இன்ப்ளூயென்சா போன்ற நோய்த் தொற்றுக்கும், இதே மருந்தை இதே பாணியில் உட்கொண்டு நலம் பெறலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதை சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பல்வேறு எழுப்பி வருகின்றனர். குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சித்த மருத்துவமும், யுனானி மருத்துவமும் தீ்ர்வை தரும் என்பதற்கு என்ன சான்று? என்பது அனைவரது கேள்வியாகும். எந்த ஒரு வைரஸ் தொற்றாக இருந்தாலும் அதற்கு சித்த மருத்துவம் தீர்வே அளிக்காது என்பது எல்லோரும் அறிந்து ஒன்றே என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். ஆயுஷ் அமைச்சகத்தின் இந்த தகவல் முற்றிலும் தவறானது, சோதனையில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அரசே வெளியிடுவது சரியா? என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது. மேலும், சித்த மற்றும் யுனானி மருத்துவர்கள் எப்போது மைக்ரோ பயலாஜி எனப்படும் நுண்ணுயிரியலை படித்தார்கள் என்றும் நெட்டிசன்கள் வினவியுள்ளனர். எனவே, அரசே தேவையற்ற வதந்திகளை பரப்பக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: