வாணியம்பாடியில் புதிதாக உருவாக்கப்பட்டது: கொடி ஏற்றாமல் பூட்டிக்கிடந்த கோட்டாட்சியர் அலுவலகம்.. பொதுமக்கள் அதிருப்தி

வாணியம்பாடி: நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாப்பட்டது. இதையொட்டி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், காவல்நிலையம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வளாகங்கள், பள்ளிகளில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் குடியரசு தின விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.  வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலெக்டர் சிவனருள் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

ஆனால் இம்மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியரசு தினவிழாவிற்கான எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை. நகராட்சி அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இன்று இந்த அலுவலகம் பூட்டி கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ‘மாவட்டம் புதிதாக உருவான பிறகு நடைபெறும் குடியரசு தினவிழா மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால் கோட்டாட்சியர் அலுவலகம் பூட்டிக்கிடக்கிறது.

தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டிய அதிகாரிகள் யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. இந்த அதிகாரிகள் மீது கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: