மாநில சிலம்பாட்டம் திருவள்ளூர் சாம்பியன்

திருவள்ளூர்:  புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், திருவள்ளூர் மாவட்டம் தொடர்ந்து 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி புதுக்கோட்டை, சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப்  போட்டியில்  திருவள்ளூர் மாவட்ட அணி முதல் இடத்தைப் பிடித்து,  தொடர்ந்து 9 முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை மாவட்டம் 2வது இடத்தையும், புதுக்கோட்டை மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்தன.

Advertising
Advertising

Related Stories: