குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ சுற்றுலா விசா வழங்க தடை: அதிபர் டிரம்ப் முடிவு

வாஷிங்டன்: குழந்தை பெற்றுக் கொள்வதற்காக, அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு தற்காலிக விசா வழங்குவதற்கு தடை விதிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை தானாக கிடைக்கும் என அமெரிக்க அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்காகவே கர்ப்பிணி பெண்கள் பலர், தற்காலிக பி-விசாவில் அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். கடந்த 2016-17ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் குழந்தைகள் இவ்வாறு பிறந்துள்ளனர். இதற்காக ‘பிரசவ சுற்றுலா’வை சில கும்பல் நடத்தி ஒரு பெண்ணுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் வரை பணம் பெற்றுள்ளது கண்டறிப்பட்டுள்ளது. இந்த பிரசவ சுற்றுலா முறையை சீன பெண்கள் அதிகம் பயன்படுத்தி அமெரிக்காவின் கலிேபோர்னியாவில் குழந்தை பெற்றுள்ளனர்.

Advertising
Advertising

இதை தடுத்து நிறுத்த அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் கிரிசம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ்அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை தானாக கிடைப்பதற்காக, பலர் தற்காலிக விசாவில் அமெரிக்கா வந்து குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். அமெரிக்க குடியுரிமையின் நேர்மை பாதுகாக்கப்பட வேண்டும். இதனால் பி-1, பி-2 தற்காலிக விசாக்கள், குழந்தை பெறும் நோக்கத்துடன் அமெரிக்கா வரும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படாது. பிரசவ சுற்றுலா தொழில், அமெரிக்க மருத்துவமனைகளுக்கு பெரும் சுமையாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது. இது குற்ற நோக்கத்துடன் கூடியது.

அமெரிக்கர்கள் கஷ்டப்பட்டு உழைத்து செலுத்திய வரிப் பணமும் உறிஞ்சப்படுகிறது.    குடியுரிமை சட்டத்தில் உள்ள இந்த ஓட்டை தவறாக பயன்படுத்தப்படுவதால், இது மூடப்பட்டு அமெரிக்கா பாதுகாக்கப்படும். இந்த முறையால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பமாக இருக்கிறீர்களா?

‘பிரசவ சுற்றுலா’ விசா ரத்து குறித்து அமெரிக்க அதிகாரி கூறுகையில், ‘‘தற்காலிக விசா கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து பெண்களிடமும், கர்ப்பமாக இருக்கிறீர்களா, அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா என்ற கேள்வியை கேட்க வேண்டாம் என தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தவிதமான கர்ப்ப சோதனை நடத்தவும் தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,’’ என்றார்.

Related Stories: