நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி: ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டம்...6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஆக்லாந்து: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அங்கு 5 டி20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும்  2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி  இன்று ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சொந்த மண்ணில் இந்தியாவிடம் வெற்றிப்பெற வேண்டி நியூசிலாந்து அணி  களமிறங்கியது. அதிகபட்சமாக மன்ரோ 59 ரன்களையும், டெய்லர் 54 ரன்களையும், வில்லியம்சன் 51 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 203 ரன்களை எடுத்தது.

Advertising
Advertising

இதைத் தொடர்ந்து, 204 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் இறங்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக, 6  பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில்,ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கே.எல். ராகுலுடன் கேப்டன் விராட் கோலி கை கொர்க்க ஆட்டம் சூடுபிடித்தது. அரைசதம் அடித்து விளையாடி வந்த கே.எல். ராகுல், 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்க, கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.

 ஆனால், கேப்டன் விராட் கோலி, 32 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர், இறங்கிய துபேயும் 13  ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டம் சூடுபிடித்தது. ஸ்ரேயாஸ் அய்யர், பாண்டே ஜோடி அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தந்தது. இதனால், 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்களை எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 58  ரன்களுடனும், பாண்டே 14 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 1-0  என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது ஸ்ரேயாஸ்  அய்யருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: