பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறந்த அமைச்சர் அமித்ஷா: கருத்து கணிப்பில் தகவல்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்களில் சிறப்பாக செயல்படுபவர்கள் குறித்து ஆங்கில பத்திரிகையான இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் பைஆனுவல் மூட் ஆப் த  நேஷன் இணைந்து, கருத்துகணிப்பு நடத்தியது. கருத்து கணிப்பில், வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்திய இந்தியா என 5 மண்டலங்களின் வெவ்வேறு பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மாநிலங்களில் 194  சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய 97 நாடாளுமன்ற தொகுதிகளில் கருத்துகணிப்பு மேற்கொள்ளப்பட்டது. 12,141 பேரிடம் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்து கணிப்பு மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷாவின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக, 42 சதவீதம் பேர்  கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டது, குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுத்ததாக மக்கள் கூறுகின்றனர்.

தொடர்ச்சியாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி இருவரும் தலா 39 சதவீத மக்கள் ஆதரவு பெற்று 2 மற்றும் 3-வது இடத்தில் உள்ளனர். மேலும், 26% மக்கள் ஆதரவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4-வது இடத்திலும், (24%) மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் 5-வது இடத்திலும், (22%) ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 6-வது இடத்திலும்  உள்ளனர். இந்த வரிசையில் 7 முதல் 10 இடங்களில் முறையே, (16%) சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், (15%) உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், (15%) விலங்குகள் பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை  அமைச்சர் கிரிராஜ் சிங் , (14%) வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திரசிங் தாமோர் ஆகியோர் உள்ளனர்.

Related Stories: