புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட்டில் டிரைவர்களை தாக்கி வழிப்பறி : திருநங்கை கைது

தண்டையார்பேட்டை:  புது வண்ணாரப்பேட்டை டோல்கேட்டில் பஸ், லாரி டிரைவர்களை தாக்கி செயின், பணம் பறித்துக்கொண்டு தப்பிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.  விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரை சேர்ந்தவர் கோபி (25). இவர் டூரிஸ்ட் பஸ் டிரைவர். நேற்று முன்தினம் காலை சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் அருகே பஸ்சை நிறுத்திவிட்டு நின்றிருந்தார்.  அப்போது அங்கு வந்த புது வண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பை சேர்ந்த திருநங்கை பாபு என்ற ரியானா (23) டிரைவர் கோபியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று கோபி கூறியதால் அவருடன் ரியானா வாக்குவாதம் செய்துள்ளார்.

Advertising
Advertising

பின்னர் திடீரென கோபி கழுத்தில் கிடந்த ஒரு சவரன் செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்றார். இதன் பிறகு அதே பகுதியில் நின்றிருந்த காசிமேடு பகுதியை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் ராமதுரையை (35) மிரட்டி பணம் பறித்துக்கொண்டு ரியானா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியானாவை கைது செய்தனர். வேளச்சேரி: தரமணி   சிஎஸ்ஐஆர்  மெயின் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெசன்ட் நகர், ஊரூர் குப்பம், எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த   அசோக்குமார் (22) என்பவரை தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிமிருந்து 900 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: