கால்நடை பராமரிப்புத்துறை பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவித்துள்ளதாவது: கால்நடை பராமரிப்புத் துறையில் ஆய்வக உடனாள்(பொதுப்பிரிவு, முன்னுரிமை பெற்றவர்), பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் (பிற்படுத்தப்பட்டோர், முன்னுரிமை பெற்றவர்) பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர்(தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், முன்னுரிமை பெற்றவர்), பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Advertising
Advertising

வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசிப்பதற்கான ஆதாரத்தின் நகலை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று) இணைக்க வேண்டும். மூன்று பணிகளுக்கும் குறைந்தபட்ச வயது 18ஆகும். அதிகபட்ச வயது (1.7.2019அன்று) தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 35, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு 32, பொதுப்பிரிவினருக்கு 30ஆகும். விண்ணப்பங்களை 6.2.2020 வரை சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகம், அல்லது www.sivaganga.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரே விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மருதுபாண்டியர் நகர், சிவகங்கை-630 562 என்ற முகவரிக்கு 6.2.2020க்குள் கிடைக்குமாறு அனுப்பலாம். அல்லது நேரில் ஒப்படைக்கலாம். அனைத்து பணிகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10வருடம், உச்ச வயது வரம்பில் கூடுதலாக வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: