கும்பக்கரை அருவியில் குடிநீர் பிளாண்ட் பழுது: சரி செய்ய கோரிக்கை

பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் அமைக்கப்பட்டிருந்த கட்டண சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் இரண்டேமாதங்களில் பழுது ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே 8 கி.மீ. தொலைவில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் பெரியகுளம் பகுதியில் பெய்யும் மழை காரணமாக இந்த அருவியில் நீர்வரத்து இருக்கும்.இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளின் வருகை இருக்கும். இந்த கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் குடிநீர் தேவைக்காக வனத்துறையின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரு.2 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட கட்டண குடிநீர் இயந்திரம் (ஆர்ஓ வாட்டர் இயந்திரம்) திறக்கப்பட்டது.
Advertising
Advertising

சுற்றுலாப் பயணிகள் இதனை பயன்படுத்தி கட்டணம் செலுத்தி சுத்தமான குடிநீரை பயன்படுத்தி வந்த நிலையில் இந்த ஆர்ஓ பிளாண்ட் திறக்கப்பட்டு இரண்டே மாதங்களில் பழுது ஏற்பட்டு இன்றுவரை அது சரி செய்யப்படவில்லை. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அருவி நீரையே குடிநீருக்கு பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இயந்திரத்தை உடனடியாக பழுது நீக்கி சுற்றுலாப்பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Stories: