49 சாதனை சிறுவர்களுக்கு பால் சக்தி புரஸ்கார் விருது : ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த விழாவில் 49 சிறுவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘பால் சக்தி புரஸ்கார் விருது’களை வழங்கி பாராட்டினார். சமூக சேவை, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், புதிய கண்டுபிடிப்பு, வீர தீர செயல்களில் சிறந்து விளங்கிய சிறுவர்களுக்கு, ‘பால் சக்தி புரஸ்கார் விருது’ வழங்கும் விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த விருது பெறுவோருக்கு ₹1 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட 49 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

உலக சாதனை படைத்த இளம் நாடக கதாசிரியர் ஒம்கார் சிங், இளம் பியானோ கலைஞர்  கவுரி மிஸ்ரா, உலகளவில் 50 மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்திய தர்ஷ்மலானி, தபேலா கலைஞர் மனோஜ் குமார் லோகர் (11) ஆகியோர் விருது பெற்றனர். கொள்ளையர்கள் இருவரிடம் இருந்து ரஷ்ய பெண் சுற்றுலா பயணியை காப்பாற்றிய இஷான் சர்மா(15), மணிப்பூரில் நீரில் மூழ்கிய 3 சிறுமிகளை காப்பாற்றிய லால்கன்சங்(10), பள்ளியில் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் இருந்து 2 சிறுமிகளை காப்பாற்றிய பீமா உள்ளிட்டோர் வீர, தீர செயல்களுக்கான பிரிவில் விருது பெற்றனர்.

Related Stories: