மேத்யூஸ் இரட்டை சதம் இலங்கை 515/9 டிக்ளேர்'

ஹராரே,: ஜிம்பாப்வே அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 515 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே 358 ரன் குவித்து ஆல் அவுட்டானது (148 ஓவர்). அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 295 ரன் எடுத்திருந்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 92 ரன், தனஞ்ஜெயா டி சில்வா 42 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.

Advertising
Advertising

டி சில்வா 63 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த டிக்வெல்லா 63 ரன், லக்மல் 27 ரன், எம்புல்டெனியா 0, ரஜிதா 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 515 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்த மேத்யூஸ் 200 ரன்னுடன் (468 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 157 ரன் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

Related Stories: