சில்லி பாயின்ட்...

* ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (886), ரோகித் ஷர்மா (868) முதல் 2 இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகம் பூம்ரா முதலிடத்தில் நீடிக்கிறார். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ஜடேஜா 10வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

* நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் ஜன. 24ம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது.
Advertising
Advertising

* விதர்பா அணியுடன் நடந்து வரும் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்காக விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

* ஐதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி லீக் ஆட்டத்தில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 635 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. மனோஜ் திவாரி 303* ரன் (414 பந்து, 30 பவுண்டரி, 5 சிக்சர்), அனுஸ்துப் மஜும்தார் 59, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 95, ஷாபாஸ் அகமது 49, அர்னாப் நந்தி 65* ரன் விளாசினர்.

Related Stories: