ஒடிசாவில் ரயில்கள் மோதல் 15 பேர் காயம்

புவனேஷ்வர்: ஒடிசாவில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில், மோதியதில் 15 பேர் காயமடைந்தனர். மும்பையில் இருந்து ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் நோக்கி லோக்மன்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது.

கட்டாக் அருகே காலை 7 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது சரக்கு ரயில் மீது மோதியது. இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. மேலும், 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கின. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்தனர். இவர்கள் கட்டாக் மருத்து கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்டு தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு ரயிலில் இருந்த பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: