தேசிய கூடைபந்து அரசு ஊழியர்களுக்கு 22ம் தேதி தேர்வு முகாம்

வேலூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்  அலுவலர் க.செ.ஆழிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கான தேசிய  கூடைப்பந்து போட்டி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பஙகேற்கும் இந்தப்போட்டி ஜன.28ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கும். இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியை தேர்வு செய்வதற்கான முகாம் ஜன.22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும்.

இந்த தேர்வுப் போட்டியில் மாவட்ட வாரியாக அணிகள் பங்கேற்கும். அதற்காக மாவட்டங்களில் அணிகள் தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் சொந்த விருப்பத்தின்பேரில் தாங்கள் பணிபுரியும் மாவட்டங்களின் சார்பில் மாவட்ட அணிகளில் பங்கேற்கலாம். சென்னை தேர்வு போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பயணப்படி, தினப்படி கிடையாது. சென்னை முகாமில் தேர்வு பெற்று தமிழக அணிக்காக பஞ்சாப் செல்லும் ஊழியர்களுக்கு பயணப்படி, தினப்படி கட்டாயம் வழங்கப்படும். தேர்வு முகாமில் பங்கேற்க விரும்பும், கூடைப்பந்து விளையாட்டில் அனுபவம் உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலரை அணுக வேண்டும்.

Related Stories: