CAA தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை: அரவிந்த் கெஜ்ரிவால், மாயாவதி புறக்கணிப்பதாக அறிவிப்பு

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம்  2019, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ஒரு மாதமாக போராட்டம் நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் விடுத்த அழைப்பை ஏற்று எதிக்கட்சி தலைவர்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடுகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தேசிய அளவில் பொதுவான போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இதில் திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங். மற்றும் இடதுசாரிகள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைமையை ஏற்பதில் இருந்து திரிணாமுல்  காங்கிரஸ், ஆம்.ஆத்மியும் பின்வாங்கியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த கூட்டத்தில் பங்கேற்பது சகஜமே என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி  தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆம்.ஆத்மி கட்சி  தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவாலும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: