கூடங்குளம் முதல் அணு உலையிலும் உற்பத்தி நிறுத்தம்

வள்ளியூர்: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் அணு உலையில் கடந்த 2013 செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது. 2வது அணுஉலையில் 2016 ஆகஸ்டு முதல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15ம்தேதி 2வது அணுஉலையில் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நேற்று முதல் அணுஉலையில் ஏற்பட்ட வால்வு கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2 அணுஉலைகளும் நிறுத்தப்பட்டதால் 2000 மெகாவாட் மின்உற்பத்தி பாதித்துள்ளது.

Related Stories: