தர்மேந்திர பிரதான் பேட்டி: பெட்ரோல், டீசல் விலை குறித்து மக்கள் பீதியாக தேவையில்லை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். முன்னதாக, அவர் அளித்த பேட்டியில், ‘‘ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றத்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை.

பெர்சியன் வளைகுடா பகுதியிலும், பூகோள அரசியல் காரணமாக பதற்றம் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை. விலையில் சற்று உயர்வு ஏற்பட்டது. கடந்த இரு நாட்களாக அது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதனால், யாரும் பெட்ரோல், டீசல் விலை குறித்து பீதியடைய வேண்டாம்,’’ என்றார்.

Related Stories: