34வது தேசிய டேக்வாண்டோ: தமிழக அணி சாதனை

காஞ்சிபுரம்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 34வது தேசிய டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்

இருந்து 238 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்திய டேக்வாண்டோ சங்கத்தின் தலைவர் ரமணய்யா இந்த போட்டிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து மாஸ்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் 28 பேர் இந்தபோட்டிகளில் பங்கேற்றனர். இந்த தொடரில் தமிழக அணி ஒட்டுமொத்தமாக 3ம் இடத்தைப் பிடித்தது.

இதில் 15 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளர் கதிரவன் தலைமையில் சென்றவர் கள். இவர்கள் 8 தங்கம், 13 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர். தேசிய அளவிலான இந்த போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. மாவட்ட தலைவர் சேகரன் தலைமையில் நடந்த இதில் துணைத்தலைவர் குட்டி (எ) பா.ஜெயக்குமார், பெற்றோர்கள் பங்கேற்று மாணவர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டினர்.

Related Stories: