சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா

சிதம்பரம்: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர். நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடந்தது. நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வந்தது.

நேற்று அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரி சமேதம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு மகா அபிஷேகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா மாலையில் நடந்தது. நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Related Stories: