ஜேசுதாசுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுடெல்லி: பிரபல திரைப்பட பின்னணி பாடகர் ஜேசுதாஸ், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா, பெங்காலி, ஒடியா, அரபிக், ஆங்கிலம், லத்தீன் மற்றும் ரஷ்ய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி ஆன்மிக பாடல்களும் பாடி மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். நேற்று அவர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘பல துறைகளிலும் திறமை மிகுந்த ஜேசுதாசுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது இனிமையான பாடல்கள் அனைத்து வயதினரிடமும் வரவேற்பை பெற்றவை. இந்திய கலாச்சாரத்துக்கு அவர் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் நீண்ட ஆண்டுகள், ஆரோக்கியதுடன் வாழ வாழ்த்துக்கள்,’ என்றார்.

Related Stories: