ஆஸ்திரேலியா புதர்த்தீயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஏலம்: ரூ.4. 92 கோடிக்கு ஏலம் போன ஷேன் வார்னேயின் பச்சை நிற தொப்பி!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் புதர்த்தீயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நடத்தப்பட்ட ஏலத்தில் அந்நாட்டு கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஷேன் வார்னேயின் பச்சை நிற தொப்பி 4 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில் கோடிக் கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, ஷேன் வார்ன் தான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பயன்படுத்திய பேகி கிரீன் என்ற தொப்பியை ஏலத்தில் விடுவதாக அறிவித்தார். இவரின் தொப்பி இந்திய மதிப்பில் ரூ. 4.92 கோடிக்கு ஏலம் போனது. ஆன்லைனில் நடந்த இந்த ஏலத்தின் மொத்த தொகையும் காட்டுத் தீ நிவாரண நிதிப்பிரிவுக்கு நேரடியாக செல்லும் என வார்ன் தெரிவித்துள்ளார். மேலும் புதர்த்தீயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து அதை வரலாறு காணாத விலையாக அவரது ரசிகர் ஒருவர் இந்திய மதிப்பில் 4 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு பச்சை நிற தொப்பியை ஏலத்தில் வாங்கினார். முன்னாள் ஜாம்பவான் பிராட்மேனின் தொப்பி 3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. அதைவிட அதிகமான விலைக்கு வார்னேயின் தொப்பி தற்போது ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள வார்னே, நன்றி நன்றி ஏலம் எடுத்த ஏலதாரர்கள் அனைவர்க்கும் நன்றி. குறிப்பாக வெற்றிகரமான ஏலதாரருக்கு மனமார்ந்த நன்றி. ஏலம் எடுக்கப்பட்ட தொகை என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஏலத்தில் வரும் பணம் செஞ்சிலுவை புதர் தீ நிவாரண நிதிக்கு நேரடியாக செல்லும் என கூறியுள்ளார்.

Related Stories: