சுற்றுச்சூழல் விதி மீறி கட்டிய நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை வெடிவைத்து தகர்க்க இன்று ஒத்திகை

திருவனந்தபுரம்: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கொச்சி மரடில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பது தொடர்பாக இன்று ஒத்திகை நடக்கிறது. கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் ‘ஜெயின் கோரல் கோவ்’, ‘ஆல்பா  ஷெரின்’, ‘ஹோலி பெயித் ஹெச்2ஓ’, ‘கோல்டன் காயலோரம்’ ஆகிய 4 அடுக்குமாடி  குடியிருப்புகள் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டதாக புகார்  கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 4 அடுக்குமாடி குடியிருப்புகளையும் இடிக்க  உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் இந்த அடுக்குமடி குடியிருப்புகளின் சுவர்களில் துழைப்போட்டு வெடிப் பொருட்களை நிரப்பும் பணி நடந்தது.

முதல் நாளான நாளை காலை 11 மணிக்கு ேஹாலி பெய்த், 11.05 க்கு ஜெயின் கோரல் கோவ், 12ம்தேதி காலை 11 மணிக்கு ஆல்பா ஷெரீன், மற்றும் 11.30க்கு கோல்டன் காயலோரம் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்படுகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க எமல்ஷன், ஷாக் டியூப் டெட்டனேட்டர்கள், டெட்டனேட்டிங் பியூஸ் மற்றும் எலெக்டரிக் டெட்டனேட்டர்கள் ஆகிய 4 வகை வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இன்று இதற்கான ஒத்திகை நடத்தப்படுகிறது. கட்டிடங்கள் இடித்த பின்னர் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை கண்டறிய சென்னை ஐஐடி நிபுணர்கள் கொச்சி வந்துள்ளனர்.

Related Stories: