மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு எழுத்தறிவித்தல் பயிற்சி: 615 மையங்களில் நடத்தப்படுகிறது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு, 615 மையங்களில் எழுத்தறிவித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 20 லட்சம் பொதுமக்கள் உள்ளனர். இதில், 15 வயதிற்கு மேற்பட்ட 1,04,000 பேர் கல்லாதவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எழுத்தறிவித்தல் அளிக்கும் வகையில் முதல் கட்டமாக 615 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளில் செயல்படும் எழுத்தறிவித்தல் மையங்கள் மாலை 4 மணி முதல் 7 மணி வரை செயல்படுகின்றன. இவற்றில் முதற்கட்டமாக 24,815 பேருக்கு எழுத்தறிவித்தல் வழங்கும் பணி துவங்கி உள்ளது. 615 மையங்களில் கல்வி மற்றும் எழுத்தறிவினை கற்பிக்க மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தன்னார்வலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிகல்வி திட்ட மாவட்ட அலுவலகத்தில் 44 ஆசிரிய பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. மாலை நேர கல்வி கற்பிக்கும் செயல்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கண்காணிப்பு செய்வதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: