சேலத்தில் தமிழ்நாடு மேக்னசைட் சுரங்க நிறுவனம் மூடப்பட்டது: வேலையிழந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

சேலம்:  சேலத்தில் தமிழ்நாடு மேக்னசைட் சுரங்க நிறுவனம் மூடபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலையிழந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  வேலையிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.  சேலம் மாவட்டம் கருப்பூர் மற்றும் வெள்ளாளப்பட்டி பகுதியில் ஏராளமான கனிமவளங்கள் இருக்கிறது.  இங்குள்ள வெள்ளை கற்கள் மூலமாகத்தான் மேக்னசைட் என்ற கனிமங்கள் வெட்டியெடுக்கப்படுகிறது.  குறிப்பாக தமிழ்நாடு மேக்னசைட்  நிறுவனமானது சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக, இங்கு அந்த வெள்ளைக் கற்களை உடைத்து எடுத்து, அதன் பிறகு மேக்னசைட்டை தயாரித்து வருகிறது.  இந்த மேக்னசைட்டானது அணு உலையில் சுடு கற்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேப்போல மாத்திரை கம்பெனிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.   

இவ்வாறு பல்வேறு நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் மேக்னசைட் நிறுவனமானது 45 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வந்த நிலையில்,  தற்போது சுற்றுசூழலை காரணம் காட்டி கடந்த ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டனர்.  இதன் காரணமாக அங்கு பணியாற்றி வந்த 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குறிப்பாக சேலம்  மாவட்டம் கருப்பூர் மற்றும் வெள்ளாளப்பட்டி, வட்டக்காடு போன்ற பல்வேறு பகுதியை சேர்ந்த அண்டை கிராம மக்கள் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவந்தனர்.  தற்பொழுது 2 ஆண்டு காலமாக அந்த தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அதனால் தொழிலாளர்கள் மேக்னசைட் சுரங்க நிறுவனம் விரைவில் திறக்கப்பட வேண்டுமென்று உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: