பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் நேர பலகைகள் அமைக்க ஆலோசனை: மெட்ரோ ரயில்வே அதிகாரி தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் நேரப் பலகைகளை அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல் வழித்தட திட்டத்தில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில்களின் வருகை குறித்த டிஜிட்டல் நேரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.  நிலையங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரயில் வரும் நேரம் தெரியும். எனவே, டிஜிட்டல் நேரப் பலகைகளை விரிவுபடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.

தற்போது, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் மெட்ரோ ரயில்களின் டிஜிட்டல் நேரப் பலகைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. பயணிகள் வருகை அதிகம்  உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் இந்த டிஜிட்டல் நேரப் பலகைகளை நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்ட்ரல், எழும்பூர், நந்தனம் உள்ளிட்ட நிலையங்களுக்கு  அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் நிறுவுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: