மாநிலங்களவை நெறிமுறை குழுவில் 19 எம்பி.க்கள் மீதான புகார்கள் நிராகரிப்பு: வெங்கையா புதிய பரிந்துரை

புதுடெல்லி: 19 எம்பி.க்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட புகார்களை நெறிமுறை குழு நிராகரித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க, கடந்த 1997ம் ஆண்டு மாநிலங்களவை நெறிமுறைகள் குழு உருவாக்கப்பட்டது. இது ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீதான புகார்களை ஆராய்ந்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து, மாநிலங்களவை சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது. இக்குழுவின் ஆய்வு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் 19 உறுப்பினர்கள் மீதான 22 புகார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமலே திருப்பி அனுப்பப்பட்டது தெரிய வந்தது. இந்த புகார்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வந்ததால், திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள 8 முக்கிய கட்சிகளின் 19 மாநிலங்களவை உறுப்பினர்கள், 2 சுயேச்சை உறுப்பினர்கள் உள்பட 22 எம்பி.க்கள் பற்றி இந்த புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, எம்பி.க்களுக்கு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் விதிகளை மறுஆய்வு செய்யவும் நெறிமுறைகள் குழுவுக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரைத்துள்ளார்.

Related Stories: