இலங்கை அணி இந்தியா வந்தது கவுகாத்தியில் உற்சாக வரவேற்பு

கவுகாத்தி: இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி வீரர்கள் நேற்று கவுகாத்தி வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா - இலங்கை அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி கவுகாத்தியில் நாளை மறுநாள் (ஜன. 5) நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாட உள்ள லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் நேற்று கவுகாத்தி வந்தனர். அவர்களுக்கு பிசிசிஐ சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்திய அணி வீரர்கள் இன்று வர உள்ளனர்.

‘இரு அணிகளுக்கும் வலைப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் இலங்கை வீரர்களும், மாலையில் இந்திய வீரர்களும் பயிற்சி மேற்கொள்வார்கள். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தற்போது எந்த பிரச்னையும் இல்லை. இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. ஜனவரி 10ம் தேதி முதல் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் 7000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள்’ என்று அசாம் கிரிக்கெட் சங்க செயலர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.டி20 போட்டி நடக்க உள்ள பரஸபாரா ஸ்டேடியத்தில் மொத்தம் 39,500 இருக்கைகள் உள்ள நிலையில், இதுவரை 27,000க்கும் அதிகமாக டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: