வேலூர் மாவட்டம் மின்துறை தலைமை பொறியாளர் பங்களாவில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

வேலூர்: வேலூர் மாவட்டம் மின்துறை தலைமை பொறியாளர் பங்களாவில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது. காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள 5 மாவட்ட மின்துறை தலைமை பொறியாளர் நந்தகோபால் பங்களாவில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்தி வருகிறது. புத்தாண்டு பரிசாக வந்த சுமார் 50 கிராம் தங்க நகை, 30 செட் பேன்ட், சட்டைகள், சுமார் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், பரிசு பொருட்கள், இனிப்பு, பழங்கள் போன்றவை அந்த பங்களாவில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மின்வாரிய தலைமை பொறியாளர் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் சிக்கியது தமிழகத்தில் இதுதான் முதன்முறை என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தலைமை பொறியாளர், மின்வாரிய அமைச்சர் தங்கமணிக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால் ரெய்டு நடத்த விடாமல் யாராவது தடுத்து வந்துள்ளனர். ஆனால் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தலைமை பொறியாளர் நந்தகோபால் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டு, உள்ளே யாரையும் அனுமதிக்காமல் ரெய்டு நடத்தி வருகின்றனர். இது குறித்து தலைமை பொறியாளர் நந்தகோபாலிடம் விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: