கோவில்பட்டி அருகே 6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம்: சிறுவனின் உடல் கிடைக்காத நிலையில் உறவினர்கள் சாலை மறியல்

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 6 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது இந்த கொலை சம்பவம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ளது முத்தலாபுரம், இந்த முத்தலாபுரம் அருகேயுள்ளது தூத்துக்குடி மதுரை தேசிய நெஞ்சாலை.  முத்தலாபுரத்தை சேர்ந்த ஜெய்சங்கர், ரேவதி தம்பதியின் ஒரே மகன் நகுலன் 6 வயது சிறுவன்.  இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.  நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நகுலனை காணவில்லை.  இந்நிலையில் மகன் காணவில்லை என எட்டையபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் அளித்ததன் பேரில் முத்தலாபுரத்தை சேர்ந்த அருள்ராஜ் என்பவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இன்று காலை வரை தனது மகன் காணவில்லை, அவன் இருக்கிறானா,  கொலை செய்யப்பட்டுவிட்டானா என்ற தகவல் இதுவரை எங்களுக்கு தெரியவில்லை, தங்கள் மகனை உடனடியாக கண்டுபிடித்தது தர வேண்டும் என இன்று காலை சுமார் 11 மணிக்கு மேல் தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபாட்டுவருகின்றனர்.  இந்த சாலை மறியல் 1 மணி நேரம் வரை நீடித்தது.  பின்னர் போலீசார் பேச்சிவார்த்தை நடத்தி தங்களது மகன் குறித்து 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து தரப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் தற்போது உறவினர்கள் அனைவரும் களைந்து சென்றனர்.  

Related Stories: