ஹரியானாவில் 10 ரூபாய்க்கு உணவளிக்கும் அடல் கிசான்-மஜ்தூர் திட்டம்: மாநில முதல்வர் மனோகர் தொடங்கி வைத்தார்

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் முன்னாள் வாஜ்பாயின் பெயரில், 10 ரூபாயில் உணவளிக்கும் திட்டத்தை முதல்வர் மனோகர் லால் கட்டார் தொடங்கி  வைத்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95வது பிறந்தநாள் கடந்த 25-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து,  அன்றைய தினம் 7 மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் ‘அடல் ஜல் யோஜனா’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி  வைத்தார்.

மேலும் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரோடாங் சுரங்கப் பாதைக்கு அடல் சுரங்கபாதை என பிரதமர் பெயரிட்டார்.  தொடர்ந்து, வாஜ்பாயின் பெயயில் தொடங்கவுள்ள பல்கலைக்கழகத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும், உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவின்  வாஜ்பாய்க்கு புகழ் சேர்க்கும் வகையில் 25 அடியில் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது.

இந்நிலையில், ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் உள்ள தானியச் சந்தையில் அடல் கிசான்-மஜ்தூர் உணவகத்தை, முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்  தொடங்கி வைத்தார். சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வயிறார உணவளிக்கும் நோக்கில், இங்கு 10 ரூபாய்க்கு 4 சப்பாத்திகள் மற்றும்  பருவகால காய்கறிகள் அடங்கிய உணவு வழங்கபடுகிறது.

ஒரே நேரத்தில் 300 பேர் அமரக்கூடிய இந்த உணவகம், தினந்தோறும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதே போன்ற உணவகங்கள் மாநிலம் முழுவதும் அனைத்து தானிய மற்றும் காய்கறி சந்தைகளிலும் திறக்கப்படும் என்றும் மனோகர் லால் கட்டார்  கூறினார்.

Related Stories: