புதுச்சேரி முதல் போட்டியில் பீகாரை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் சிக்கிமை 269 ரன், இன்னிங்ஸ் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று முடிந்த 3வது லீக் போட்டியிலும் மிசோரமை 272 ரன், இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது புதுச்சேரி. கவுசிக் காந்தி சதம் தப்பித்த தமிழ்நாடு: இந்தூரில் நடந்த மத்தியபிரதேசம்- தமிழ்நாடு இடையே நடந்த லீக் போட்டி டிராவில் முடிந்துள்ளது. முதல் இன்னிங்சில் தமிழகம் 149, மத்தியபிரதேசம் 333ரன் எடுத்தன. ஏற்கனவே கர்நாடகம், இமாச்சல் அணிகளிடம் தோற்றிருந்த தமிழகம் மத்தியபிரதேசத்திடமும் தள்ளாடியது.