மெல்பர்ன்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஸ்மித், மார்னசின் அரை சதத்தால் ஆஸ்திரேலியா 4விக்கெட் இழப்புக்கு 257 என்ற கவுரவமான எண்ணிக்கையை தொட்டது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான ஐசிசி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் ‘பாக்சிங் டே’ நாளான நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த நியூசி. பந்து வீச்சாளர் டிரெனட் போல்ட் முதல் ஓவரிலேயே ஆஸி.க்கு அதிர்ச்சி தந்தார். அவர், தொடக்க ஆட்டக்கார் ஜோ பர்ன்சை கிளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பிறகு டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபஸ்சேஞ்ச் நிதானமாக விளையாட தொடங்கினார். வழக்கம் போல் அதிரடி காட்ட முயன்ற வார்னர் 41 ரன்னில் வாக்னர் பந்து வீச்சில் சவுத்தீயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.