அமெரிக்காவில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இந்திய வம்சவாளிகள் பேரணி: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

வாஷிங்டன்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் மட்டுமின்றி பல்வேறு  அமைப்பினரும், எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர்கள்  மற்றும் பல்வேறு அமைப்பினர், பல பகுதிகளில் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

உத்தரபிரதேசத்தில் லக்னோ, அலிகார் பகுதிகளில் நடந்து வந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. இதில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் இந்திய வம்சவாளிகள் பேரணி நடத்தினர். ஆஸ்டின், ராலே மற்றும் சியாட்டில்  ஆகிய பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் பேரணியாக சென்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அவர்கள் இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளின் கொடிகளை ஏந்தியபடியும், ஆதரவு அட்டைகளுடன் கோஷங்கள் எழுப்பியபடியும் ஆதரவு தெரிவித்தனர்.  குஸ்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே நடைபெற்ற பேரணியில் ஏராளமான இந்தியர்கள் பங்கேற்றனர். டேல்லா, சான் பிரான்சிஸ்கோ, சிக்காக்கோ,  நியூயார்க், வாஷிங்டன், சேன் ஜோஸ், அட்லாண்டா உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக  பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: