பைக்கில் கை உருளை சின்னத்துடன் வேட்பாளர் நூதன பிரசாரம்

கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் வரவணை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பழனியப்பன் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கரூர் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற  இவருக்கு கை உருளை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடவூர் ஒன்றியம் வேப்பங்குடியை சேர்ந்த பழனியப்பன், தனது சின்னத்தை எப்படி மக்களிடம் கொண்டுசெல்வது என யோசித்து தனது பைக்கில், கைஉருளையை இணைத்து அதனை  ஓட்டியபடியே சென்று தினமும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.

வேட்பாளர் பழனியப்பன், வரவணை, வேப்பங்குடி, சுண்டுகுழிப்பட்டி, குளத்தூர், பாப்பனம்பாட்டி, உள்ளிட்ட 15கிராமங்களுக்கு இவ்வாறு கைஉருளை பொருத்திய பைக்கில் சென்று சின்னத்தை காண்பித்து கிராம மக்களிடம் வாக்கு சேகரித்து  வருகிறார்.

Related Stories: