குழந்தைகள் ஆபாச வீடியோ பதிவிறக்கம் செய்த விவகாரம் தனியார் இணையதள மையங்களில் சோதனை: துணை கமிஷனர் ஜெயலட்சுமி தகவல்

சென்னை: குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் படங்கள் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக, சென்னையில் உள்ள தனியார் இணையதள மையங்களில் சோதனை நடத்தி வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு  துணை கமிஷனர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வெளிநாட்டு ஆபாச இணையதளத்தில் இருந்து அதிகளவில் குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் படங்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவுக்கு புகார்கள் வந்தன.  அதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆபாச இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிறக்கம் செய்யும் நபர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி கடந்த வாரம் சென்னையில் 30 பேர் அந்த பட்டியலில் இருப்பதாகவும், அவர்கள் குறித்த விவரங்களை சென்னை மாநகர காவல் துறையில்  ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ெசன்னை மாநகர பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ெசன்னை பாதுகாப்பான நகரமாக உள்ளது. பாலியல் தொடர்பான புகார்கள் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு என வாட்ஸ்  அப் மற்றும் பேஸ்புக், இ-மெயில் முகவரி அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை சென்னையில் மட்டும் போன் மூலம் 25 புகார்கள் மற்றும் இ-மெயில் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பகுதி என கண்டறிந்து 10 புகார்கள் வந்துள்ளது. அந்த  புகாரின் மீது தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அதேபோல், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட 30 பேரில் 12 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாங்கள்  சென்னையில் உள்ள தனியார் இணையதள மையங்களில் சோதனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: