ஆந்திராவில் ‘நேசன்ன நெஸ்தம்’ திட்டத்தின்கீழ் நெசவாளர் குடும்பத்தினருக்கு ஆண்டிற்கு 24 ஆயிரம் நிதி: திட்டத்தை தொடங்கினார் ஜெகன் மோகன்

திருமலை: ஆந்திராவில் அனந்தபுரம் மாவட்டத்தில் நெசவு தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 24 ஆயிரம் வழங்கும் ஒய்.எஸ்.ஆர். நெசவாளர்கள் நட்பு (நேசன்ன நெஸ்தம்)  திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் நேற்று தொடங்கி வைத்து  பேசினார். அப்போது அவர் பேசியதாவது: எனது பாதயாத்திரையின் போது நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்து ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் ஆண்டிற்கு 24 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தேன். அதன்படி நெசவாளர்களுக்கு எனது பிறந்த நாளான இன்று (நேற்று)   நெசவாளர்கள் நட்பு  திட்டத்தை தொடங்கி வைக்கிறேன். இதன் மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள 85 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெற உள்ளனர்.   இந்த பணம்  நேரடியாக நெசவாளர்களின் வங்கியில் செலுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: