ஓடும் ரயிலில் பணியில் இருந்த டிடிஆரிடம் செயின் பறிப்பு: கோடம்பாக்கத்தில் துணிகரம்

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து நேற்று தாம்பரத்துக்கு மின்சார ரயில் சென்று கொண்டிருந்து. அந்த ரயிலில், டிக்கெட் பரிசோதகர் ரெஜினி பயணிகளிடம் டிக்கெட் பரிசாதனை செய்து கொண்டிருந்தார். ரயில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் வந்தது. அப்போது ரெஜினி, முதல் வகுப்பு பெட்டியின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தார். பயணிகளை இறக்கிவிட்டு ரயில் புறப்பட்டபோது, ஒரு ஆசாமி திடீரென ரெஜினியின் கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சியடைந்த ரெஜினி, அவரை பிடியுங்கள் என்று சத்தம் போட்டார். அதற்குள் ரயில் வேகமாக செல்ல தொடங்கியது. அதற்குள் அந்த ஆசமி தப்பினர். இதுகுறித்து ரெஜினி, மாம்பலம் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.  ஓடும் ரயிலில் பெண் டிடிஆரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: