ஓபிஎஸ்சின் உதவியாளர் விபத்தில் காயம்

பெரியகுளம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் அழகுசுப்பிரமணியன் (50). இவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டு உதவியாளர். சில நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் இருந்து டூவீலரில் அழகுசுப்பிரமணியன் தேனி சென்று கொண்டிருந்தார். லெட்சுமிபுரம் பகுதியில் சென்றபோது முன்னால் டூவீலரில் சென்றவர் திடீரென வளைவில் திரும்பினார்.  இதனால் பின்னால் வந்த அழகுசுப்பிரமணியன் டூவீலர்  அதன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: