திருச்செந்தூர் அருகே கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே தோப்பூர் கடற்கரையில் மயங்கி நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது. திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூர் கடற்கரையில் சுமார் 7 அடி நீளமும், சுமார் 200 கிலோ எடை கொண்ட சிறியவகை திமிங்கலம் மயங்கி நிலையில் நேற்று மாலையில் கரை ஒதுங்கியது. இதன் வாய் பகுதியில் காயம் காணப்படுகிறது. இந்த திமிங்கலம் எந்த வகையை சேர்ந்தது என்பது தெரியவில்லை. கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை மன்னார் வளைகுடா கடல்பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினங்கிகளில் உள்ள திமிங்கலமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லாமொழி கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. பின் ஒன்றன் பின் ஒன்றாக செத்து மிதந்தன. பின்னர் மணப்பாடு கடலில் அனைத்தும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலங்கள் ஓங்கள் வகையை சேர்ந்தது என கூறப்பட்டது. அதே போன்று தோற்றத்துடன் தோப்பூர் பகுதியில் தற்போது திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது. கடலோரத்தில் கரை ஒதுங்கியதால் கப்பலில்  அடிப்பட்டு கரை ஒதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: