நேரு குடும்பத்தை பற்றி சர்ச்சை கருத்து பாலிவுட் நடிகை பாயல் சிறையில் அடைப்பு

கோடா: நேரு குடும்பம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கியை வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கி, ஜவஹர்லால் நேரு, காந்தி, இந்திரா காந்தி உள்ளிட்ட நேரு குடும்பத்தினர் மீதும் அவர்களின் நடத்தை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டரில் வீடியோ மூலம் கடந்த அக்டோபர் 10ம் தேதி, கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து ராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷர்மேஷ் சர்மா அளித்த புகாரின் பேரில் பண்டி போலீசார் பாயல் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக பதிலளிக்குமாறு அவருக்கு நோட்டீசும் அனுப்பினர்.

ஆனால், பாயல் இதற்கு பதிலளிக்காமல் போகவே, அகமதாபாத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற ராஜஸ்தான் போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்து விசாரணைக்காக ராஜஸ்தான் அழைத்து வந்தனர். இந்நிலையில், நடிகை பாயலை நேற்று ராஜஸ்தான் கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Stories: