சிண்டிகேட் அமைத்து ஊராட்சி பதவிகள் ஏலம் மக்கள் தான் முட்டாள்களா?

மதுக்கடைகளுக்கும் ஊராட்சி பதவிகளுக்கும் ஒற்றுமை உண்டு தெரியுமா?  வியப்பாக இருக்கிறதா; உண்மை தான்; 80களில் மதுக்கடைகளை ஏலம் விடும் முறை பரபரப்பாக காணப்பட்டது. அப்போது பணத்தால் வலுத்தவர்கள் சிண்டிகேட் அமைத்து, யார் அதிகம் பணம் தருகின்றனரோ அவர்களுக்கு மதுக்கடை ஏலம் விடுவது உண்டு. அப்படி தான், இப்போது ஊராட்சி பதவிகள் கூவிக்கூவி ஏலம் விடுவது பகிரங்கமாக நடக்கிறது. முன்பு போல அல்லாமல், மத்திய நிதி ஊராட்சிகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. அதில் ஆளும் தரப்பின் யார் குறுக்கீடும் இல்லாமல் நிதியை கையாள முடியும். அதனால் தான் உள்ளூர் அரசியல்வாதிகள் வீட்டை அடகு வைத்தாவது ஏலத்தில் ஊராட்சி தலைவர் பதவியை பிடிக்க தயாராகின்றனர். இதற்கு முன்பு சில ஊராட்சிகளில் இப்படி ஏலம் நடந்து ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதுண்டு. ஆனால், இப்போது ஜனநாயக தேர்தல் முறையையே கேலிக்கூத்தாக்கும் வகையில் ஏலம் நடக்கிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க இதுவரை தேர்தல் ஆணையத்தால் முடியவில்ைல. திருமணத்துக்கு ெகாண்டு சென்ற பணம், நகைக்கடைகளின் பணம், ஜவுளிக்கடைக்காரர்கள் பணம் என்று பிடிக்க முடிந்ததே தவிர, உண்மையாக வாக்காளர்களுக்கு அறிவியல்பூர்வமாக பணத்தை அரசியல்வாதிகள் சேர்ப்பதை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் கைகட்டித்தான் வேடிக்கை பார்க்கிறது. அப்படிப்பட்ட ஆணையத்தால் ஏலம் நடப்பதை தடுக்க முடியுமா என்ன? என்று பொதுமக்களே சிரிக்கின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்துக்கு அடுத்து இந்த ஏலம் எடுக்கும் கலாச்சாரம் தமிழகத்தில் புதிதாக பரவி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுக்க இந்த ஏல கலாச்சாரம் பரவினால் எவ்வளவு ஆபத்தானது?  இந்திய தேர்தல் ஆணையமே நேரடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தான் இந்த ஆபத்தான ஏல கலாச்சாரத்தை தடுக்க முடியும். ஜனநாயக தேர்தலையே கேலிக்கூத்தாக்கும் இந்த ஆபத்தான ஏல கலாச்சாரத்தால், ஓட்டு போடும் உரிமை கூட இல்லாமல் இருக்கும் மக்கள் தான் கடைசியில் முட்டாள்களா?  என்று பேசத்துவங்கி விட்டனர். இதோ நான்கு திசைகளில் ஒரு அலசல்:

Related Stories: