உள்ளாட்சி தேர்தலில் அமமுகவிற்கு பொதுசின்னம் மறுப்பு: நீதிமன்றத்தை நாட முடிவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அமமுகவிற்கு பொதுசின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக உள்ள அமமுகவை இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக பதிவு செய்தது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலில் அமமுகவிற்கு பொதுசின்னம் வழங்கக்கோரி அக்கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் மற்றும் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர், வெற்றிவேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கும்போது முன்னுரிமை அளிப்போம். ஆனால், பொதுசின்னம் வழங்க இயலாது என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். பொது சின்னம் ஒதுக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே, பொது சின்னம் வழங்க முடியாததற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளோம். காரணத்தை எழுத்துப்பூர்வமாக நாளை தருவதாக தெரிவித்துள்ளார். எழுத்துப்பூர்வமாக காரணம் கிடைக்கப்பெற்ற உடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். நீதிமன்றத்தை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. இவ்வாறு கூறினார்.

Related Stories: